கூவம் நதியில் கழிவு.. தொற்றுநோய் ஏற்படும் அபாயம்- வீடியோ

  • 5 years ago
கூவம் நதியில் கழிவு ..தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

கழிவுநீர்களை லாரிகள் மூலமாக கொண்டு சென்று சட்டவிரோதமாக கூவம் நதியில் கொட்டுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை



சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரத்தில் இருந்து புழல் செல்லும் நெடுஞ்சாலையில் சர்விஸ் சாலை ஓரத்தில் மற்றும் கூவம் நதியிலும் தினம்தோறும் சட்டத்துக்கு விரோதமாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கழிவு நீரை பட்ட பகலில் கொட்டி செல்கின்றனர். இதனால் தேங்கி நிற்க்கும் கழிவு நீர் சாக்கடையில் புழுக்கள் ,ஈக்கள்,கொசு அதிகமாக கான படுகின்றனர் மேலும் இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம், மற்றும சரக்கு லாரி வாகன ஓட்டிகளுக்கு கடும் துர்நாற்றம் விசுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினார் ஏற்கனவே தமிழகம் எங்கும் டெங்கு,எலி, பன்றி,காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் உயிர் இழந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இது போன்ற செயலால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே உடனடியாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல சுகாதார அதிகாரி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல்துறையினரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Des: Citizens request to take the waste water through the lorries and illegally pouring in the river in the river

Recommended