மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை-வீடியோ

  • 6 years ago
மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த துத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.கார் மெக்கானிக்கான இவர் நாமக்கல்லில் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவுகார் பட்டறையில் உள்ள கார் தீபற்றி எரிவதாக வந்த தகவலின் பேரில் அவரது மனைவி உமாமகேஸ்வரியுடன் நாமக்கல் சென்று தீயை அணைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார். கணவன்மனைவி இருவரும் துத்திகுளம் மாரியம்மன் கோவில் அருகே வீதியில் நடந்து சென்ற போதுஅங்கு மறைந்திருந்த இருவர் மாதேஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை கண்ட உமாமகேஸ்வரி சத்தம் போட படுகொலை செய்த இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்துஅருகில் இருந்தவர்கள் மாதேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் விசாரணைமேற்கொண்டதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் மாதேஸ்வரனின் அக்கா மகன்கள்ராதாகிரு‘;ணன் மற்றும் சதீஸ் என தெரிய வந்தது. இரு குடும்பத்திற்கும் இடையே பணம்கொடுக்கல் வாங்கலில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருப்பதும் தெரிய வந்தது.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார் தலைமறைவான இருவரையும்தேடி வருகின்றனர்

Des: The incident has caused a shock to the wife's eyes

Recommended