கல் குவாரி குழியில் கொட்டப்படும் மருத்துவக கழிவுகள்- வீடியோ

  • 6 years ago
கரூர் மாவட்டம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்குஉட்பட்டநொச்சிபாளையம், கள்ளிபாளையம் மற்றும் கள்ளிபாளையத்திற்கு இடைப்பட்டபகுதியில் கல் குவாரிசெயல்பட்டுவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாகஅந்தகுவாரியில் 100 அடிக்கும் மேல் எடுத்துவிட்டதால் பாறைக்குள் தண்ணீர் வரஆரம்பித்துவிட்டதால் அப்பகுதியில் கற்கள் எடுப்பதைநிறுத்திவிட்டனர். இந்த நிலையில் இந்தகல் குவாரியில் கடந்தசிலவாரங்களாக இரவு நேரங்களில் லாரிகள் வந்துசெல்வதாகஅப்பகுதிகிராமமக்களுக்குதகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரைலாரிகள் அந்த கைவிடப்பட்ட கல்குவாரிக்குவந்துசெல்வதைகண்டறிந்தனர். பகலில் அங்கு சென்று பார்த்த போது கல்குவாரியில் வெளியூரிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதைகண்டறிந்தனர். இதனையடுத்துகடந்த 2 நாட்களாகஅப்பகுதிபொதுமக்கள் கண்காணித்த போது நள்ளிரவில் வந்தலாரியைபிடித்துசோதனைசெய்தனர். அதில் காகிதஆலைகழிவுகளை கொண்டுவந்துகொட்டுவதாக லாரிஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதனையடுத்துஅந்தலாரியைபிடித்துவாங்கல் காவல் நிலையபோலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்குவிசாரணைநடத்தப்பட்டுவருகிறது. கைவிடப்பட்டகல் குவாரிக்குசென்றுபார்கையில் சுமார் 100 அடிஆழத்திற்குசுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளகல் குவாரியில் 100க்கும் மேற்பட்டலோடுகள் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கின்றன. இவை முழுக்கமுழுக்கமருத்துவகழிவுகள், மற்றகழிவுகளுடன் சேர்த்துஅரைப்பதுபோன்றுஉருவம் தெரியாமல் நசுக்கிபிளாஸ்டிக் கேன்கள், மருந்துபாட்டில்கள், மருந்துபைகள் உள்ளிட்டவைகள் பேப்பர் அட்டைகழிவுகளுடன் கலந்துகொட்டப்பட்டுள்ளது. இதிலிருந்துவெளியேறும் கழிவுகள் நிலத்தடிநீரில் கலந்துவருகிறது. இது போன்றுகலக்கப்படும் கழிவு நீர் சுமார் 20 கி.மீ தூரத்திற்குகலந்தால் இப்பகுதியில் உள்ளஆழ்துளைகுடிநீர் மற்றும் விவசாயகிணறுகள் பாழ்பட்டுபோய்விடும் என்றகுற்றச்சாட்டுஎழுந்துள்ளது. காசுக்குஆசைப்பட்டுகேரளாவிலிருந்துகொண்டுவரும் மருத்துவக் கழிவுகளைகொண்டுகல் குவாரிகளை மூடி வருவதாகவும் இவற்றை தடுத்து நிறுத்த மாவட்டநிர்வாகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

Des; Public complained that groundwater was polluted by night clinics in stone quarries

Recommended