முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

  • 6 years ago

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் திருச்சி முக்கொம்பு கதவணைகள் உடைந்தன. இதையடுத்து உடைந்த மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உடைந்த மதகுகளின் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், முக்கொம்பு கதவணையில் மதகுகளை சீரமைக்கும் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன என்றும், மதகுகள் உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

Recommended