ஆதரவு குறைந்ததால் ஆடிப்போன அழகிரி

  • 6 years ago
திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து முக அழகிரியின் மவுசு குறைவதுடன் ஆதரவும் குறைவதால் ஆடிபோயுள்ளார் அழகிரி…

திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார் . இதனால் செயல் தலைவராக இருந்த முக ஸ்டாலின் திமுகவின் தலைவராக தேர்வு செய்யபட்டு பதவி ஏற்று் கொண்டார் . இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில் மன ஆதங்கத்தை தந்தையிடம் தெரிவித்ததாகவும் வரும் 5 ஆம் தேதி ஒரு லட்சம் தொண்டர்கள் படை சூழ சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை மெளன அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அழகிரியின் பேச்சுகள் சர்ச்சைகளை கிளப்பிய வண்ணம் இருந்தது. அழகிரியின் பேச்சு தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருவதால் அவரது தொண்டர்கள் அதிர்ப்தி அடைந்ததுடன் அழகிரியை எந்த செய்தியாளர்களும் சந்திக்கவிடாமல் அவரின் வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க திமுகவில் முக்கிய பொருப்பு அழகிரிக்கு கிடைக்கும் என்று நம்பி இருந்த அவரது தொண்டர்கள் அழகிரியின் மவுசு நாளுக்கு நாள் குறைவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் முக ஸ்டாலின் பக்கம் மெல்ல மெல்ல செல்ல தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மதுரையை சேர்ந்த திமுக மாவட்ட நிர்வாகிகள் அழகிரி நடத்தும் மெளன அஞ்சலி பேரணியில் கலந்து கொள்ள கூடாது என்று தொண்டர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால் வரும் 5 ஆம் தேதி முக அழகிரி தலைமையில் நடைபெறும் மெளன அஞ்சலி பேரணியில் லட்சம் குறைந்து ஆயிரமானதால் அப்செட் ஆகியுள்ளார் அழகிரி. குடும்பத்தினர் பேச்சை கேட்டு ஸ்டாலினுடன் இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும் என்றும் ஆதரவாளர்களின் பேச்சை நம்பி மெஜாரிட்டியை நிருபிப்பதாக தெரியாமல் கூறிவிட்டோமோ என்ற அச்சத்தில் நிலைகுழைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி ஆதரவாளர்களை சந்த்திப்பதையும் தவிர்த்து பொட்டி பாம்பாய் உள்ளாராம் அழகிரி…
As Mukti Stalin has been appointed as DMK's leader,

Recommended