நாராயணசாமி - ரங்கசாமி கைகோர்ப்பு...புதுவையில் பரபரப்பு- வீடியோ
  • 6 years ago
சுதந்திர தினம் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஆளுநர் அழைத்து மாலையில் தேனீர் விருந்து கொடுப்பது வழக்கம். அதுபோல் நேற்று புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் முதல்வர் நாராயணசாமியும் ரங்கசாமியும் கைகொடுத்து மனம் விட்டு பேசிய நிகழ்வு புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 72வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுவையில் ஆளுநர் கிரண்பேடி சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது மாளிகையில் தேனீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். தேனீர் விருந்திற்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டும் இன்றி அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது எதிர்கட்சி தலைவரான ரங்கசாமியும் தேனீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். தேனீர் விருந்தில் ரங்கசாமியை பார்த்த முதல்வர் நாராயணசாமி கை கொடுத்ததுடன் அவரது அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். நாராயணசாமியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ரங்கசாமியிடம் நெருங்கி பேசியுள்ளனர். இச்சம்பவம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Des : On the occasion of Independence Day, the governor invited political figures and celebrities at the governor's palace to make a tea party in the evening. Similarly, Chief Minister Narayanasamy and Rangaswamy were present at the tea ceremony held at the governor's office in New Delhi yesterday.
Recommended