கரூரில் நாத உற்சவ விழா- வீடியோ

  • 6 years ago
கரூரில் உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும் நடைபெற்ற நாத உற்சவ விழாவில் 400-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு.

கரூரை அடுத்த நெரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்திரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது. இன்று 9-வது ஆண்டாக உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும்,கோவில் திருப்பணிகள் விரைவில் முடிய வேண்டியும் நாத உற்சவ விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்று இறைவனுக்கு ஒருசேர நாத உற்சவத்தை நடத்தினர். இந்நிகழ்வில் சிவ பக்தர்கள்,ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த 400-க்கும் மேற்பட்ட தவில் குழல் இசை கலைஞர்கள் தமிழாலும் தமிழ் இசையாலும் இறைவனை ஆட்கொள்ளும் விதமாக இசை சமர்ப்பனம் செய்து வருகிறார்கள். இந்தகோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவு பெறவும்,உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும் இறைவனுக்கு அற்பனம் செய்கின்ற நிகழ்வாக இங்கு நடைபெற்று வருகிறது என்றார்.

Des: More than 400 musicians are participating in the funeral procession in Karur and the world for good and devotion.

Recommended