மூவாயிரம் மொழிகள் அழியும் அமைச்சர் பரபர

  • 6 years ago
யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் மூன்றில் இருந்து 5ஆண்டுகளுக்குள் 3000 மொழிகள் உலகில் அழிந்து விடும் என கூறியுள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற பல்கலைகழக நிகழ்ச்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார், அப்போது பேசுகையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் யூதர்களுக்கு அடுத்து தமிழர்கள் தான் வாழ்வதாக கூறினார். உலக மொழிகளில் அதிக செல்வாக்கு பெற்ற மொழிகளில் தமிழ் மொழி 14வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.தமிழ் மொழியை 3 வருடத்தில் 10க்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக 10 அம்ச திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதுடன் இந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 218 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியை தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் தமிழை வளர்க்க 26 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 16 வெளிநாடுகளிலும் 10 இந்தியாவிலும் செயல்படும் மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா நாடுகளில் தமிழ் கற்றுத்தர தமிழ் ஆசிரியர்களை கேட்டு இருக்கிறார்கள் சென்னையில் இயங்கும் சொற்குவை, அகரமுதலி இரண்டும் இணைந்து புதிய தமிழ்ச் சொற்களை மாதத்திற்கு 2000 வீதம் உருவாக்க என திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Minister Mambai Pandiyarajan has said that 3,000 languages will be destroyed in the world within three to five years by UNESCO.

Recommended