ரூ 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலுடன் மூன்று கேரள வாலிபர்கள் கைது- வீடியோ

  • 6 years ago
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் ரூ 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலுடன் மூன்று கேரள வாலிபர்கள் குமுளியில் கைது. கேரள கலால்துறை போலீசார் அதிரடி.

தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள கேரள கலால்துறை சோதனைச்சாவடியில் இன்று கலால்துறை இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ஜேக்கப் தலைமையில் போலீசார்கள் கிருஷ்ணகுமார், ரவி, அனுப் சோமன், சுரேஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகப்பகுதியிலிருந்து கேரளாவுக்குள் நுழைந்த ஒரு ஆடம்பர காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறியதால் போலீசார்கள் அவர்களது காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரின் சீட்டின் அடியில் பிளாஸ்டிக் கவரில் ஒளித்து வைத்திருந்த நிலையில் சுமார் அரைகிலோ கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது.

போலீசார்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் எர்ணாகுளம் ஆலுவா பகுதியைச்சேர்ந்த அஹமது கபீர்(24) ஷாரூக்சலீம்(25), ஷாமின் என்பதும், அவர்கள் கஞ்சா ஆயிலை கம்பத்தில் வாங்கியதாகவும் தகவல் தெரிவித்தனர். கஞ்சா ஆயிலையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார்கள் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். போலீசார்கள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆயிலின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ 50 லட்சமாகும் என்றனர்.



Des : Three Kerala youth were detained at Kumuly with a cash prize of about Rs 50 lakh worth trying to smuggle in the Theni district. Kerala Police Police Action

Recommended