ரத்தம் கொடுக்க சென்றவரிடம் இருந்து கிட்னி திருட்டு

  • 6 years ago
மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஷகிலா பானு. கணவரை இழந்த இவர், தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் மதுரை ஒத்தக்கடைப் பகுதியில் வீட்டு வேலை செய்து வசித்து வந்துள்ளார், இந்நிலையில் கொட்டாம்பட்டியை சேர்ந்த ஷகிலா பானுவின் உறவினர்களான முகம்மது ராஜா, பஷீர் ஆகியோர் ஷகிலா பானுவிற்கு அடிக்கடி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பஷீர் தனது மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கூறி ஷகிலாவின் மகன் முகம்மது பக்ருதீனை ரத்தம் கொடுக்க வற்புறுத்தி மதுரை தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது, இந்நிலையில் சில நாட்கள் கழித்து முகம்மது பக்ருதீன் உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது, மேலும் இடுப்பில் பெரிய அளவில் தழும்பு இருந்ததையும் உணர்ந்து அரசு மருத்துவமனைக்கு தனது மகனை ஷகிலா அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் முகம்மது பக்ருதீனின் கிட்னி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனது மகனை இரத்தம் தேவை என அழைத்து சென்று கிட்னியை எடுத்து விட்டதாக கூறி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஷகிலா புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended