மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கு மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படும் - ராதா மோகன் சிங்

  • 6 years ago
மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய கடல் மீன் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படும் என மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மத்திய கடல்மீன் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வருகைதந்து ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பங்கேற்றார். இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின், கூண்டு மீன் வளர்ப்பிக்கான மீன் குஞ்சுகளை பயணாளிகளுக்கு வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர். இந்தியா முழுவதும் 11 மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் மீனவர்களுடைய வளர்ச்சிக்கும் விவசாயிகளுக்கு வருமானம் பெறக் கூடிய வகையிலும் இந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended