மீன்கள் குறித்த ஆய்வு, மீன்கள் தேக்கமடைந்துள்ளதால் விசைபடகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • 6 years ago
கேரளா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயன கலவை மூலமாக மீன்கள் பதப்படுத்தப்படுவதாக கேரளா அரசு சமீபத்தில் கண்டுப்பிடித்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை கேரளா அரசு சோதனை செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை விற்பனை செய்ய கேரளாவில் காலதாமதமாகிறது. கேரளாவிற்கு அதிக அளவில் மீன்கள் ஏற்றுமதி செய்யும் குமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் அதிக அளவில் குவிந்து விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக கூறி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியை சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்ப்பட்ட மீன்பிடி விசைபடகு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended