கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்பதா?

  • 6 years ago
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் நல்ல வாய்ப்பு கோவை மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆயிரத்து 150 கோடிக்கு, ஆளும் அ.தி.மு.க அரசு தாராளமாக வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதனை அந்த பிரான்ஸ் நாட்டின் சுயஸ் நிறுவனம் பெருமையுடன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காத அ.தி.மு.க. அரசு, கோவை மாநகரத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவைக்கான உரிமத்தை, மோசமான முன்னுதாரணங்கள் படைத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பது, கோவை மக்களுக்கு இந்த அரசு செய்யும் துரோகம் என குற்றம் சாட்டியுள்ளார்.



Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended