புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிரான வழக்கு – வழக்கை ரத்து செய்யக்கோரி காவலர் ராஜ்குமார் மனு

  • 6 years ago
கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், தம்பதியினரை படம் எடுத்து அத்துமீறலில் ஈடுபட்ட புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், தம்பதியினரை படம் எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிராக 2 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வழக்கு விசாரணையை காவல்துறைக்கு பதிலாக வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றக்கோரியும் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், வேலியே பயிரை மேய்வதாக உள்ள ராஜ்குமாரின் செயலை அனுமதிக்க முடியாது என தனது கண்டனத்தை தெரிவித்தார். காவலர் இப்படி ஒரு செயலை செய்தால், பொதுமக்கள் என்ன ஆவார்கள்? என நீதிபதி ஆவேசமடைந்தார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் ராஜ்குமார் காவலர் சீருடையில் பலரை மிரட்டியுள்ளார் என வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி பி.என். பிரகாஷ் வழக்குகளை ராஜ்குமார் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended