வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம்- வீடியோ
  • 6 years ago
நீலகிரி மாவட்டம் குன்னுார் நகர பகுதியில் எம் ஜி ஆர் நகர குடியிருப்பு உள்ளது , இங்கு 300 க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது , இந்த பகுதியில் இன்று ‌ராஜநாகபாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது, இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்ததுடன் வனத்துறையினருக்கும் தீ‌யணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர், இதனிடையில் பாம்பு அருகேயுள்ள வீட்டின் கூரையிலிருந்து உள்ளே நுழைய முயற்சி செய்தது , அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாம்மை வீட்டிற்குள் செல்லாதவாறு துரத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர் , சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பாம்பு லாவகமாக பிடிபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர், பிடிப்பட்ட பாம்பு 10 அடி நீளமுள்ள ராஜநாகபாம்பு என்று தெரியவந்தது, பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது ராஜநாகபாம்பு நீலகிரி மாவட்டத்தில் வர வாய்ப்பில்லை என்றதுடன் பிடிபட்ட பாம்பு குன்னுார் நகர பகுதிக்குள் எப்படி வந்தது என்று விசாரணை செய்துவருகின்றனர், நீலகிரிமாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் ராஜநாகம் பிடிபட்டிருப்பது இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது,
Recommended