பிரபல கொள்ளையன் சிவபாலனை போலீசார் கைது செய்தனர்

  • 6 years ago

விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இந்த வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் தாலுகா போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விக்கிரவாண்டி தாலுகா வாக்கூர் கிராமத்தை சேர்ந்த சிவபாலன் என்பதும், இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளந்தளிர் என்பவருடன் சேர்ந்துகொண்டு விழுப்புரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து சிவபாலனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 8 லட்சம் மதிப்பிலான 20 பவுன் நகைகள் மற்றும் 25 செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Police arrested the famous pirate Sivapalan who looted and attacked the people who were going alone

Recommended