தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்திருக்கும் முதல்வர் தரப்பு

  • 6 years ago
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள அங்கீகாரம், தினகரன் ஆதரவு 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களை மிரள வைத்துள்ளது. ' இனியும் தினகரன் பக்கம் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. இங்கே வந்துவிடுங்கள்' என நேரடி அழைப்புவிடுத்து வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் நேற்று வெளியான அறிவிப்பு ஒன்றில், அ.தி.மு.கவின் புதிய சட்டவிதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் உத்தரவு வெளியாகியிருந்தது.

As the election commission agrees to change in ADMK's bylaw, Ruling party Ministers invite TTV Dinakaran supporters to return back to the home party.

Recommended