நீட்டை எதிர்க்க 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை- வீடியோ

  • 6 years ago
பாரதிய ஜனதா கட்சி அல்லாத 6 மாநில முதல்வர்கள் இணைந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்

என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நேற்று நீட் தேர்வுகளுக்கான தேர்வு

முடிவுகள் வெளியானது. இதில் தமிழகம் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. இது

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனை முடிவதற்குள், இன்று நீட் தேர்வு முடிவு காரணமாக பிரதீபா என்ற மாணவி

தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சேர முடியாது என்பதால் அவர்

பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் மீண்டும் நீட்டிற்கு எதிராக எல்லோரும்

குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

Stalin calls Non-BJP ruling states to oppose NEET exam together.

Recommended