அறம் செய்ய விரும்புவோம் புத்தக வெளியீட்டு விழாவில் சூர்யா - வீடியோ

  • 6 years ago
அறம் செய்ய விரும்புவோம் புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும்

அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, உதயசந்திரன் ஐஏஎஸ், ராஜகோபாலன், சா.மாடசாமி,

பத்ரிகையாளர் சமஸ், கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன்

ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, ‘கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது

அகரம். 2006ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று

செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்க தேவையான

புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த

அகரம்.

இது போல் படி படியாக பலவற்றை கூறலாம். பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்லா தகுதியும்,

திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?. பன்னிரண்டு

வருடம் படித்த மாணவன் வறுமையின் காரணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலே

அகரம்.


The book launch of Aram Seiyya Virumbu by Agaram Foundation happened last evening in

Chennai at Anna Library. Actor Suriya, Founder of Agaram Foundation, Udhayachandran

IAS, Raja Gopalan, S Maadasamy, Journalist Samas, Shri Kalvi Mani and many others took

part in the occasion.

#surya #agaram #suriya #sivakumar #booklaunch

Recommended