காவேரி நீர் வரும்... சத்தியம் செய்யும் அமைச்சர்...வீடியோ
  • 6 years ago
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

காவேரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தங்கள் மாநிலத்திற்கே தண்ணீர் போதவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் சீதாராமையா ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு தர முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கும்பகோணத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய படி தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்க உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் குறுவை சாகுபடி தொடங்க கால அவகாசம் உள்ளதால் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று துரைக்கண்ணு தெரிவித்தார்.

des : The minister said firmly that 177 TMC water for Tamil Nadu would be taken in the Supreme Court order.
Recommended