சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன் கைது- வீடியோ

  • 6 years ago
மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் ஒட்டப்பள்ளியை சேர்ந்தவர் தேவேந்திரன். ஓட்டுனரான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை தான் தங்கியுள்ள இடத்திற்கு அழைத்து சென்று யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கத்தியால் குத்தி கொலை செய்வதாக மிரட்டியும் உள்ளார். இது குறித்து சிறுமி தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் தேவேந்திரன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி படிக்கும் சிறுமிகள் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகளை காம கொடூரன்கள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்யும் அவல நிலை தமிழகத்தில் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடந்து வருகிறது.

Recommended