எஸ்விக்கு தமிழக அரசு கருணை- டிடிவி விளாசல்-வீடியோ

  • 6 years ago
எஸ்வி சேகர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றம் கைது செய்ய கூறியும் த மிழக அரசு கைது செய்ய தயங்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக மக்களை மத்திய அரசு இரண்டாம் குடிமகன் போல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வுகள் வெளிமாநிலத்தில் நடத்துவதாக செய்திதாள்களில் செய்தி வெளியான போதே கண்டனம் தெரிவித்ததாகவும் நீயூட்ரினோ மீதேன் திட்டங்களுக்கு தமிழகத்தில் இடம் உள்ள போது நீட் தேர்வு நடத்த இடம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். மேலும் எஸ்வி சேகரை உயர் நீதிமன்றம் கைது செய்யலாம் என்று கூறியும் தமிழக அரசு எஸ்வி சேகர் பாஜவை சேர்ந்தவர் என்பதால் அவரை கைது செய்ய உத்தரவிடுவதற்கு தயங்குவதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

Recommended