வடமாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் புழுதி புயல்-வீடியோ

  • 6 years ago
வடமாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் புழுதி புயல் வீசும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

Recommended