அனல்பறக்கும் விசாரணை ! அல்லோலப்படும் நிர்மலா தேவி

  • 6 years ago
கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் விடிய விடிய .சி.பி.சி.ஐ.டியினர் விசாரணை நடத்தியதில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது

கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் அழைத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அருப்புக்கோட்டை தேவாங்குர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர் இது குறித்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ராஜேஸ்வரி தலைமையில் 5வது நாளாக நிர்மலா தேவிடம் விசாரணை நடத்திவருகின்றனர் பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்றது தன்னுடன் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்கள் முருகன் போன்றோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி வாக்குமுலம் அளித்துள்ளார் இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த முருகன் போலீசாரிடம் கையும் களவுமாகச் சிக்கினார். முருகனிடம் விசாரணையைத் துவங்கியுள்ள சிபிசிஐடியினர் நிர்மலாவிற்கும், முருகனுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது, எவ்வாறு உதவி செய்தார் இது போல் எத்தனை மாணவிகளை இந்தச் சூழ்ச்சியில் சிக்க வைத்துள்ளனர் என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் இன்றுடம் முடிவடைய உள்ளதாள் அவரிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேலும் கல்லூரியில் கடந்த ஓராண்டு சிசிடிவி கேமாராவில் பதிவானவர்கள் நிர்மலாவை சந்தித்தவர்களிடம் விசாரணை நடத்தவும் நிர்மலாவின் கணவர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்

DES : Nirmala Devi, a professor who tried to mislead college students, has reported several stinging reports on the CBC investigation.

Recommended