எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ- வீடியோ

  • 6 years ago
பழைய எண்ணெய் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் தீயணைப்பு வீரர்கள்.கொண்டுவந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பழைய எண்ணெய் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியிலிருந்து ஆந்திரா செல்லும் சாலையில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இதில் இரும்பு பொருட்கள் பழைய அட்டைகள், பழைய ஆயில் என சேமித்து வைக்கப்பட்ட நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில், கும்மிடிப்பூண்டி, சிப்காட், பொன்னேரி, தேர்வாய்கண்டிகை என 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்புகளுக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும் புகை சூழ்ந்து அந்த பகுதி முழுவதும் இருண்டு காணப்பட்டது. ஆயில் சேமித்து வைத்த பேரல்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ரசாயன நுரையை தண்ணீருடன் கலந்து பீய்ச்சி அடித்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள். அதிக வெப்பம் காரணமாக ஆயில் சூடாகி தீப்பற்றி இருக்கலாம் எனவும், முழுமையான விசாரணைக்கு பின்னரே தீவிபத்திற்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தெரியவரும் எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended