கெயிலை புகழ்ந்து ட்வீட் போட்ட ஷேவாக்

  • 6 years ago
டி-20 கிரிக்கெட்டில் உலக நாயகனான, கிறிஸ் கெயிலை தேர்வு செய்ததன் மூலம், ஐபிஎல்லை காப்பாற்றியுள்ளேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரான முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து, சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

virendar shewag praised gayle

Recommended