ஆளுனருக்கு அதிகாரம் இல்லை..கனிமொழி ஆவேசம்- வீடியோ

  • 6 years ago
அரசு அலுவலகம் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்த ஆளுனருக்கு அதிகாரம் இல்லை.என்று திமுக எம் பி கனிமொழி தெரிவித்துள்ளார்

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்த திமுக மகளிர் அணி தலைவரும் பாராளுமன்ற மேல் சபை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஓமலூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக ஆளுனர் பன்வாரிலால் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகரிகருடன் ஆய்வு நடத்த அதிகாரம் இல்லாதவர், மத்திய அரசு ஆளுனரை திரும்ப பெற வேண்டும் பல்கலைகழக துணைவேந்தவர் நியமனம் உள்ளிட்ட கல்வி நிலைய செயல்பாடுகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்றார் . தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பாஜகவிற்கு துணை போகிறது. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை களைய சீரான பார்வை வேண்டும். எச் ராஜா தொடர்ச்சியாக திமுக மீது தவறான தகவல்கள் மற்றும் விமர்சனங்களை நாகரீகமற்ற முறையில் பேசி வருகிறார். அவர் மீது பாஜக கட்சி தலைமை முறையாக அறிவுறுத்தப் பட வேண்டும். என்றார்

DES : The governor does not have the authority to inspect the office of the office of the office, said DMK MP Kanimozhi

Recommended