போலி கார்டுகளை பயன் படுத்தி லட்சக்கணக்கில் பணம் கொள்ளை- வீடியோ

  • 6 years ago
ஏ.டி.எம் போலி கார்டுகளை பயன் படுத்தி லட்சக்கணக்கில் பணம் கொள்ளை பொறியியல் பட்டதாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .


புதுச்சேரியில் தலைமை காவல் நிலையத்தில், காவல் துறை இயக்குனர் மற்றும் டி.ஐ.ஜி.சந்திரன் ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் புதுச்சேரியில் சமீபகாலமாக வங்கியில் உள்ள ஏ.டி.எம்மில் , மற்றொரு வங்கி கணக்கில் உள்ள பணம் கொள்ளை அடித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

புதுச்சேரி லஷ்மி நகரப்பகுதியில் உள்ள பாலாஜி மற்றும் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் நவீன சாதனங்கள் உடன் இருந்தனர் என்றும், அவர்கள் இருவரிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் போலி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் வைபவ் மிஷின்கள் இருந்தது கண்டதும், போலீசார் விசாரணையில், அவர்கள் ஒவ்வொரு வங்கியில் உள்ள ஏ. டி.எம் போலி கார்டுகளை கொண்டு கொள்ளை அடித்து உள்ளனர் என்றும்,அவர்களிடம் ரூ.40 லட்சம் பணம், கார் ஏ.டி.எம் கார்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 31லட்சம் வரை பணம்- நகைகள் கொள்ளை அடித்து உள்ளனர் என்று போலீசார் விசாரணை யில் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்

des : Two more people have been arrested, including millions of money laundering engineering graduates, using the ATM fake cards.

Recommended