சிறுமி பலாத்கார சம்பவம்.. காஷ்மீரில் 2 அமைச்சர்கள் ராஜினாமா!

  • 6 years ago
ஜம்மு காஷ்மீர் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

Two BJP Ministers resigned from JK Ministry due to protests. Under fire from opponents and protests from Jammu & Kashmir chief minister Mehbooba Mufti, BJP on Friday secured the resignations of two of its ministers.

Recommended