டிஜிட்டல் மீடியா அசோசியேசன் போராட்டம்!- வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுக்கவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் திரையுலகினரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேசன் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ் டாக்கீஸ் மாறன், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், டெம்பிள் மங்கீஸ் குழுவினர், யூ - டர்ன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் பேசினர். இந்தப் போராட்டத்தின்போது மெட்ராஸ் சென்ட்ரல் கோபி பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சே ஆகணும். ஐபிஎல் மேட்ச் பார்க்கப் போங்க. உங்க இஷ்டம் தான். அதுக்கு தடை கிடையாது. ஆனால் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் பார்க்கப் போகும்போது கருப்பு சட்டை போடக்கூடாதாம். உள்ளாடை கருப்பு நிறத்துலல அணியக்கூடாதுனு ரூல் போட்ருக்காங்க. நான் என்ன கலர்ல உள்ளாடை போடணும்னு அரசாங்கமே சொல்லமுடியாது.. அப்பா அம்மாவே சொல்லமுடியாது. நீங்க யார் சொல்றது..?" என ஆவேசத்தோடு பேசினார். "போன் எடுத்துக்கிட்டு காலேஜ்குள்ள வரக்கூடாதுனு சொல்றதுக்காக காலேஜையே கட் அடிக்கிற கூட்டம் நாங்க. அவங்ககிட்ட போய் ஸ்டேடியத்துக்குள்ள போன் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுனு சொல்றாங்க. இத்தனையையும் ஏத்துக்கிட்டு போறதுனா போங்க. கிரிக்கெட்டை விட முக்கியம் சோத்துப் பிரச்னை!" எனப் பேசினார் கோபி.


Tamilnadu digital media association protest against Sterlite and to insist to built CMB. Madras central Gopi says about IPL match rules and regulations.


#madrascentral #gopi #cauvery

Recommended