காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடக தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு தகவல்- வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகும் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் காதர்க்கி கூறியுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்றால் என்ன என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி விளக்கம் கேட்டது. அதேபோல, மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

Putting to rest the confusion over the Cauvery Management Board, Karnataka has said that its stand before the Supreme Court today stood vindicated. Mohan Katarki appearing for Karnataka told OneIndia that the SC’s direction to the Centre to submit the Draft Scheme vindicates Karnataka’s stand that Cauvery Management Board Scheme recommended by the Tribunal is not to be adopted.

Recommended