ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறுவன்
  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையே வேண்டாம் இதில் விரிவாக்கம் வேறா எங்களின் குரல் கேட்கிறதா என்று மத்திய, மாநில அரசுகளே என்று சிறுவன் அருண் தூத்துக்குடியில் எழுப்பிய குரல் அவர்களின் வேதனையை வெளிப்படுத்துவதாக இருந்தது. வாழ்வாதாரத்தை நசுக்கும் ஸ்டெர்லைட்டை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்தச் சிறுவன் போடும் முழக்கம் கேட்கிறதா அரசுகளே.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடியின் வளத்தையே அழித்து கருப்பு மண்டலமாக மாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

We dont want sterlite Tuticorin boy's slogan for centre and state, protests against sterlite extension continuing in and around villages of Tuticorin.
Recommended