ஜஸ்டின் ட்ரூடோ - கனடாவில் காலி, தமிழ்நாட்டில் ஜாலி!- வீடியோ

  • 6 years ago
கனடாவை விட இந்தியாவில்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிக மதிப்பு இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

கனடா பிரதமர் சரியாக ஒரு மாதம் முன்புதான் இந்தியா வந்தார். அவரை இந்திய பிரதமர் மோடி வரவேற்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு தமிழர்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தார்கள். இந்தியாவில் அவருக்கு மதிப்பு கூடியுள்ளதாக கணக்கெடுப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் அந்நாட்டில் அவரின் மதிப்பு குறைந்துள்ளது. சிபிசி என்ற கணக்கெடுப்பு நிறுவனம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ மீது அந்நாட்டு மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருந்தார்கள். 40 சதவிகித மக்கள் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். முதல்முறையாக அந்நாட்டில் சிலர், தங்கள் குழந்தைகளுக்கு கூட ஜஸ்டின் ட்ரூடோ என்று பெயர் வைத்தார்கள். சில சிரியா அகதிகளும் இதில் அடக்கம். ஆனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களின் எண்ணிக்கை 33.7 சதவிகிதமாக குறைந்தது இருக்கிறது.

மாறாக எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களின் எண்ணிக்கை 37.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.ஆனால் ஆச்சர்யமாக ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு பிரதமர் ஒரு நாட்டுக்கு வேண்டும் என்று இந்திய மக்கள் கூறுவதாக சிபிசி நிறுவனம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு ஜஸ்டின் ட்ரூடோ தீர்வு வைத்து இருப்பதாக மீம்கள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Justin Trudeau gets more crush in India than Canada. He has lost several percentage of supporters in Canada after India visit, but gained huge support in India.

Recommended