எம்பிக்கள் வீர வசனம்…திருநாவுக்கரசர் பொளேர்….வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயார் என்று அதிமுக எம்பி நவநீதகிருஸ்ணன் கூறியுள்ளது வெட்டி பேச்சு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. என்றும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும் என்றும் இனியும் காலம்தாழ்த்தாமல் தமிழக அமைச்சர்கள் உடனடியாக மோடியை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் . காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதும் ஒரு பொருளாக சேர்க்கப்படும். என்றும் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய தயார் என்று நவநீதகிருஸ்ணன் எம்பி கூறியுள்ளது வெட்டி பேச்சு அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். புதவியை ராஜினாமா செய்தாலே போதும். என்றார்

Des : Tamil Nadu Congress leader Tirunavukkarar said that the AIADMK MPs are ready to commit suicide if the Cauvery management board is not set up

Recommended