5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த ஒரே முதல்வர் சித்தராமையா- வீடியோ

  • 6 years ago
கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்ற சரித்திரம் படைத்திருக்கிறார் சித்தராமையா. கர்நாடகாவில் 1972-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸின் தேவராஜ் அர்ஸ் முதல்வரானார். அவர் 1977-ம் ஆண்டு வரை முதல்வராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு தேர்தலில் வென்று தேவராஜ் அர்ஸ் வென்று மீண்டும் முதல்வரானார். ஆனால் 2 ஆண்டுகாலம்தான் 2-வது முறையாக முதல்வராக பதவி வகித்தார் தேவராஜ் அர்ஸ். தேவராஜ் அர்ஸுக்குப் பின்னர் சுமார் 40 ஆண்டுகால கர்நாடகா அரசியல் வரலாற்றில் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்த முதல் முதல்வர் என்ற சரித்திரத்தை தற்போது சித்தராமையா உருவாக்கியுள்ளார்.


Siddaramaiah will finish a full 5-year term before the elections are conducted, after a long gap of 40 years.

Recommended