மர்ம காய்ச்சல் கிராம மக்கள் பீதி- வீடியோ
  • 6 years ago

வீட்டுக்கு ஒருவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராமத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கல்லடி திடல் கிராமத்திற்கு காவிரி திட்ட குடிநீர் துர்நாற்றத்துடன் வருவதாக மக்கள் புகார் கூறினர்.இந்நிலையில் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையம் இளையான்குடி ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலைக்கிராம ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வீடு வீடாக சென்று கிருமி நாசினி மருந்துகளை தெளித்தும் காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவ்வூர் மக்கள் வீட்டுக்கு ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் என்ன காய்ச்சல் என்று கேட்டால் மருத்துவர்கள் சொல்வதில்லை. 2 நாளில் குணமாகி விடும் என்று மட்டும் தான் சொல்கின்றனர் என்கிறார்கள் மாசுபட்ட குடிநீர் மூலம் காய்ச்சல் பரவி இருக்கலாம் என்பதால் மர்ம காய்ச்சலை கட்டு படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

des : People are frightened in the village because one is suffering from mysterious fever
Recommended