அஜித்துக்கு வேணாம் - விஜய்க்கு வேணும் : அது என்ன?- வீடியோ

  • 6 years ago
விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது. தமிழ் சினிமாவில் டிஜிட்டல் சர்வீஸ் வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகக் கட்டணம் விதிப்பதை எதிர்த்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் புதுப்பட வெளியீட்டை கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து நிறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட, தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையுமே நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் - ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் சன் பிக்சர்ஸ் படத்துக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள சிறப்பு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்தப் படத்துடன் சேர்த்து மேலும் 3 படங்களுக்கான படப்பிடிப்பையும் நடத்திக் கொள்ள சிறப்பு அனுமதி கோரியுள்ளனர். ஒட்டுமொத்த சினிமா உலகமே ஸ்தம்பித்து நிற்கும் இன்றைய சூழலில் விஜய் படத்துக்கு மட்டும் ஷூட்டிங் நடத்த பர்மிஷன் கிடைக்குமா? பார்க்கலாம்!


A special permission has been seeking for Vijay's movie shooting.

Recommended