India vs Bangladesh, 5th T20I, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
  • 6 years ago
இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.
இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அதற்கு அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றது. கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. இதனால் புள்ளிகள் பட்டியில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிலும், இலங்கை இரண்டாவதும், வங்கதேசம் கடைசி இடத்திலும் இருக்கிறது.



India vs Bangladesh, 5th T20I, India beat Bangladesh to enter final
Recommended