முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின் ஆலோசனை

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். காவிரி நடுவர் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த பிப்ரவரி16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 192 டிஎம்சி நீர், 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. நிலத்தடி நீர் இருப்பை காரணம் காட்டி, தமிழகத்துக்கு 14.75 டிஎம்சியை குறைத்த உச்ச நீதிமன்றம், அந்த நீரை கர்நாடகாவுக்கு வழங்கியது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.


Chief Minister Edappadi K. Palaniswami is likely to receive Opposition Leader M.K. Stalin on Saturday in his chamber in the Secretariat for the second time in two months to evolve a consensus on the state’s stand on the sensitive Cauvery river water issue.

Recommended