செம்மரம் கடத்த வந்ததாக 50 தமிழர்களை கைது- வீடியோ

  • 6 years ago
ஆந்திராவில் செம்மர கடத்த முயன்றதாக அம்மாநில போலீசார் 50 தமிழர்களை கைது செய்தனர். அவர்கள் வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அம்மாநில செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் செம்மரம் கடத்த முயன்றதாக 50 தமிழர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்து விட்டு வைக்கோலை வைத்த மர்ம நபர்களை சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 15 டன் செம்மரக்கட்டைகள் மத்திய வருவாய் புனலாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை பெரிய கண்டெய்னர்களில் அடைத்து சீல் வைத்து துறைமுக பைபாஸ் ரோட்டில் சுங்கத்துறைக்கு சொந்தமான டெர்மினலில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

Recommended