மதுரையில் நடந்த என்கவுண்டர்...பின்னணி என்ன?- வீடியோ

  • 6 years ago
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்கச் சென்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் மதுரை மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் மஃப்டியில் அந்த பகுதியை நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு ரவுடிகள் பதுங்கி இருப்பது உண்மைதான் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Recommended