அஜித்தின் அடுத்த படம்: #Ajith59- வீடியோ

  • 6 years ago
நடிகர் அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள் கசிந்து வருகின்றன. 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 59-வது படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம். படக்குழுவினர் தேர்வானதும், இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Ajith's 'viswasam' movie shooting will start soon. Ajith is reported to have acted in 'Sathuranga vettai' director Vinoth's next film.

Recommended