சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

  • 6 years ago
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்த விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத இறைவணக்கப் பாடல் திணிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சம்ஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் இசைக்கப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



Sanskrit devotional song plays in Chennai IIT function instead of National Anthem. Tamil movements condemns for this.

Recommended