லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பாபன்- வீடியோ

  • 6 years ago
பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாபன் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
வாய்ஸ் இந்தியா கிட்ஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷமய்யா மற்றும் பாடகரும்-இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் பாபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தார். ஃபேஸ்புக் லைவில் பல குழந்தைகளுடன் பாபன் ஹோலி கொண்டாடினார். வாய்ஸ் இந்தியா கிட்ஸ் போட்டியாளர்களுடன் ஹோலி கொண்டாடிய பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணப்பொடியை தடவினார். மைனருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பாபன் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார் ரூனா. பாபன் பாலியல் குற்றம் செய்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended