கஸ்தூரிக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணுமாம்!

  • 6 years ago
தூக்கம் போச்சு, எனக்கு இப்பவே அது தெரிஞ்சாகணும் என்று கமலின் கட்சி பெயர் குறித்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி. உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். அது என்ன மய்யம் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். மேலும் கட்சி கொடி குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி கமலின் கட்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சினேகன், வையாபுரி, ஸ்ரீப்ரியா...விஜய் டிவி மகேந்திரன்...மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோ தான் பிரதான ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல? என்று கேட்டுள்ளார் கஸ்தூரி. எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ? மையம் வேற , மய்யம் நா வேற போல. சரி, அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm மைஅம் னு வருது .... #SleepGone #maiam #இப்பவே_தெரிஞ்சாகணும்... என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.



Actress Kasthuri wants clarification about the word Maiam in Kamal Haasan' party name Makkal Needhi Maiam. Netizens have tried their level best to clarify her doubt.

Recommended