தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நவீன வசதிகளுடன் கூடிய மும்முனை மின்சார ரயில் சேவை | Oneindia Tamil

  • 6 years ago
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நவீன வசதிகளுடன் கூடிய மும்முனை மின்சார ரயில் சேவை தொடங்கியது.பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மும்முனை மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற் சாலையில் 12 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அந்த பெட்டிகள் அனைத்தும் தாம்பரம் ரயில் நிலைய பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த வாரம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து முதலாவது மும்முனை மின்சார ரயில் செங்கல்பட்டுக்கு புறப்பட்டது. பின்னர் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற் கரைக்கு இந்த ரயில் புறப்பட்டு சென்றது. தினமும் 9 முறை செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மார்க்கத்திலும் ஒருமுறை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

tambaram chengalpattu train ladies compartment improved

Recommended