குழந்தையை இரண்டாக பிளக்கும் வைரல் வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் மேஜிக் செய்யும் தந்தை ஒருவர் தனது 4 மாத பெண் குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்யும் காட்சிகளும், அந்த குழந்தை சிரிக்கும் காட்சிகளும் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜஸ்டின் ஃபோலோம். இவர் மேஜிக் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதை வைத்து மேஜிக் செய்ய திட்டமிட்டார் ஜஸ்டின் ஃபோலோம். உடனடியாக இரு புத்தகத்தை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார்.

Recommended