ஒரு தலைக்காதல் விபரீதம்..மாணவிக்கு தீ வைத்த இளைஞன்- வீடியோ

  • 6 years ago
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ள இளைஞர் அவர் மறுப்பு தெரிவித்ததோடு போலீசாரிடமும் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் படித்து வருகிறார் நடுவக்கோட்டையை சேர்ந்த மாணவி. 9ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பாலமுருகன் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

Recommended