சலசலப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவியின் பேச்சு இதுதான்- வீடியோ

  • 6 years ago
அதிமுக அரசு கவிழும் என தொடர்ந்து தினகரன் பேசி வருவதால் அமைச்சர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா பாணியில் வேட்டையாடினால்தான் சரிவரும் எனவும் குமுறி வருகிறார்களாம். தஞ்சையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தினகரன், கதிராமங்கலத்தில் பேசும்போது, ' இப்போது ஆட்சியில் உள்ள ஆறு பேரைத் தவிர யார் வந்தாலும் எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வோம். தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவோம்' எனப் பேசினார்.தினகரன் குறிப்பிடும் அந்த 6 பேர் யார் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள இருவரைப் பற்றியும் கொங்கு மண்டலம், வேலூர், தென் மாவட்டத்தில் உள்ள சிலரையும்தான் தினகரன் குறிப்பிடுகிறார்.

Sources said that TamilNadu Senior Ministers sent a warning message to RK Nagar MLA Dinakaran who is trying to topple the Govt.

Recommended