துணை முதல்வருக்கு தங்கதமிழ் செல்வன் சவால்- வீடியோ

  • 6 years ago
எம்எல்ஏவாகவும் மாவட்ட செயலாளருமாக இருந்த தன் மீது ஊழல் புகார் எழுந்திருந்தால் எந்தவித நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூளை குழப்பிபோய் உள்ளதாக கூறினார். டிடிவி தினகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எந்த வித பிரச்சணைகளும் இல்லை என்றும் அணைவரும் ஒன்றாக இருப்பதா தெரிவித்தார். மேலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியுள்ளது குறித்து பதில் அளித்த தங்கதமிழ்செல்வன் பொதுபணித்துறை ஹவுசிங்போர்டுகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Des : Tamil Selvan has said he is ready to meet any action taken if he has a corruption complaint against the MLA and the District Secretary.


Recommended